கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் எனும் ஊரில் அமைந்துள்ளது தாணுமாலயன் கோயில். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள இக்கோயில் தாணுமாலயன் கோயில் என அழைக்கப்படுகிறது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இந்த நிலையில் சுசீந்திரம் தாணுமாலயன் பெருமாள் கோயில் தேரோட்டம் வருகின்ற 09 ஆம் தேதி நடைபெறுகின்றது. ஆயிரக்கணக்காக பக்தர்கள் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய இருக்கின்றனர். இதையொட்டி வருகின்ற 09 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்று அம்மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வட நேரே அறிவித்துள்ளார்.