Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அங்க வச்சு தான் நடந்துச்சு… நீங்களும் ஒத்துழைக்க வேண்டும்… கலெக்டரின் தீவிர செயல்…!!

பொதுமக்களின் நலன் கருதி சுய உதவி குழுவிற்கு 7 கோடி 9 லட்ச ரூபாயை கடனாக கலெக்டர் திவ்யதர்ஷினி வழங்கியுள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சுய உதவி குழு சார்பாக கடன் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியானது கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் 109 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 7 கோடி 9 லட்ச ரூபாயை கடன் உதவிகளுக்காக வழங்கியுள்ளார். இதில் கிராமப் பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களின் வறுமையை ஒழிப்பதற்கும், பெண்களின் சமூகப் பொருளாதார ஆற்றலை மேம்படுத்துவதற்காகவும் கடந்த 2012-2013 ஆம் ஆண்டிலிருந்து ஊரக வாழ்வாதார இயக்கம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் வறுமை ஒழிப்பு சங்கங்கள் வட்டார மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஆகியவற்றை இயக்கி அதன் மூலம் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த இத்திட்டங்கள்  மிகவும் பயனளிக்கிறது. இதனை அடுத்து சுய உதவிக்குழுக்களின் பொருளாதார கடன் தேவைகளை அதிக அளவில் பூர்த்தி செய்வதற்காக வங்கி கடன் வழங்கப்பட்டு வருகின்றது.

இதனைத்தொடர்ந்து இம்மாவட்டத்தில் செயல்படுகின்ற அனைத்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு ஏற்படுத்தி தரப்பட்டு வருகிறது. ஆனால் கடன் உதவிகளை முறையாக பயன்படுத்தி சுய உதவிக்குழுக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார். மேலும் குழந்தை திருமணங்களை தடுக்க அதை சார்ந்த நிர்வாகம் உரிய ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |