எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழக அரசு விடுமுறை அளிக்க கோரி உத்தரவிட்ட நிலையில், அதனை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் அதிவிரைவாக பரவி வருகிறது. இதன் தாக்கம் தமிழகத்திலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்தும், தமிழகத்தின் எல்லையோர பகுதிகளில் உள்ள மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவற்றை மார்ச் 31ம் தேதி வரை மூடவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார்.
ஆனால் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை அரசு சார்பில் விடுமுறை அளித்த பின்பும் பள்ளிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆகவே அரசு சார்பில் தமிழகம் முழுமைக்கும் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதா? என்பதை சோதிப்பதுடன் விடுமுறை அளிக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.