பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். இவர் சுஷானே என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில் ஹிருத்திக் மற்றும் சுஷானே ஆகிய 2 பேருமே மகன்களை பார்த்துக் கொள்கிறார்கள். தற்போது நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிகையும், பாடகியுமான ஷபா ஆசாத் என்பவரை காதலித்து வருகிறார்.
இவர்கள் 2 பேரும் பொது நிகழ்ச்சிகள் அனைத்திலும் சேர்ந்தே கலந்து கொள்ளும் நிலையில், 2 பேரும் லிவிங் டு கெதரில் இருக்கப் போவதாக தகவல்கள் வெளியானது. அதோடு மும்பையில் உள்ள மூன்று மாடி அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறப் போவதாகவும், அதன் மதிப்பு சுமார் 100 கோடி எனவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் நடிகர் ஹிருத்திக் தன்னைப் பற்றி தகவல்களுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இது குறித்து நடிகர் ஹிருத்திக் ரோஷன் வெளியிட்டுள்ள twitter பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, இதில் எவ்வித உண்மையும் கிடையாது. ஒரு பொது நபராக நான் ஆர்வத்தின் கீழ் இருக்கிறேன் என்பதை புரிந்து கொள்வேன். ஆனால் தவறான தகவல்களை தள்ளி வைப்பது தான் நல்லது. இது ஒரு பொறுப்பான வேலை என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவால் 100 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஹிருத்திக் தன்னுடைய காதலியுடன் லிவிங் டு கெதர் லைப்பில் வாழப்போவதாக பரவிய தகவல் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.
There is no truth to this.
As a public figure, I understand I'll be under the lens of curiosity, but it's best if we keep misinformation away, especially in our reportage, which is a responsible job. https://t.co/jDBQF0OvdL
— Hrithik Roshan (@iHrithik) November 20, 2022