Categories
சினிமா தமிழ் சினிமா

“வாழும் வரலாறு” இந்திய திரையுலகின் அடையாளச் சின்னம்….. நடிகர் அமிதாப்பச்சனுக்கு முதல்வர் வாழ்த்து….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இவர் நேற்று தன்னுடைய 80-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த பிறந்த நாளை முன்னிட்டு திரை உலக  பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமிதாப்பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டு இருந்தார். இதேபோன்று தமிழக முதல்வர் ஸ்டாலினும் நடிகர் அமிதாப்பச்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் வாழும் லெஜெண்ட் மற்றும் இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நட்சத்திரத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அமிதாபச்சன் அவர்கள் இன்று 80 வயதை எட்டியுள்ளார். உங்கள் வர்த்தக முத்திரையான கலை பண்புகள் எதிர்காலத்திலும் இந்திய திரை உலகில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தி இன்னும் பல தசாப்தங்களுக்கு பார்வையாளர்களை கவரட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |