நடிகர் தனுஷ் அறிமுகப்படமான ‘துள்ளுவதோ இளமை’ இந்த படம் திரைப்படம் 2002ம் ஆண்டு மே 17ம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி 17 வருடங்கள் ஆகின்றது. தனுஷின் சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் தனுஷ் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பத்தை இந்த படம் ஏற்படுத்தியுள்ளது. தனுஷின் திரையுல வாழ்க்கை 17 ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அவரது புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து கூறி வருகின்றார்கள்.
இதுகுறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆகி விட்டது. இதை என்னால் நம்ப முடியவில்லை. எதுவும் தெரியாத ஒரு சின்ன பையனாக இருந்த எனக்கு உங்கள் இதயத்தில் இடம் கொடுத்து நடிகனாகக் கூட முடியாது என்று நினைத்த என்னை ஒரு ஸ்டாராக மாற்றி இருக்கிறீர்கள் இதெல்லாம் நேற்று நடந்தது போல் இருக்கிறது என்று தனுஷ் கூறியுள்ளார்.