Categories
தேனி மாவட்ட செய்திகள்

பந்தின் மீது கவனம்…. 120 அடி மொட்டை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் மரணம்….. தேனி அருகே சோகம்…!!

தேனி அருகே விளையாடி கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் வடபுதுப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ராமன். இவர் அதே பகுதியில் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய ஒரே மகன் ஜெகதீசன். இவருக்கு வயது 43. மாலை ஜெகதீசன் அப்பகுதி சிறுவர்களுடன் மகிழ்ச்சியாக கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தான். பேட்டிங் செய்த சிறுவன் ஒருவன் பந்தை ஓங்கி அடிக்க, அதை கேட்ச் பிடிப்பதில் கவனம் செலுத்திக் கொண்டே எதிர்பாராத விதமாக 120 அடி கிணற்றில் தவறி விழுந்துள்ளார் ஜெகதீசன்.

அந்த கிணறு ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வறண்டு கிடந்துள்ளது. இதில், படுகாயமடைந்த சிறுவன் ஜெகதீசன், வலியால் அழக்கூட முடியாமல் அப்படியே மயங்கி விழுந்தான். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ மனையில் அவசர அவசரமாக தூக்கிச் சென்று சேர்த்தனர்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாட்டு மோகத்தில் துள்ளித் திரிந்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |