Categories
உலக செய்திகள்

“Little Amal-ன் நடை பயணம்!”.. பெற்றோரை பிரிந்து வாடும் அகதி குழந்தைகளுக்கான படைப்பு..!!

சிரிய நாட்டின் அகதி குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட மூன்றரை அடி உயரம் கொண்ட பொம்மை, தற்போது சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிற்கு வந்தடைந்துள்ளது.

Little Amal என்ற பொம்மை, பெற்றோரை பிரிந்து வாடும் அகதி குழந்தைகளின் நிலையை விளக்க உருவாக்கப்பட்டிருக்கிறது. தற்போது, 9 வயதாகும், Little Amal, சிரிய துருக்கி எல்லையிலிருந்து 8000 கிலோ மீட்டர்கள் நடை பயணமாக பிரிட்டனின் மான்செஸ்டர் பகுதிக்கு சென்று கொண்டிருக்கிறது.

அதாவது, இந்த பொம்மையை அகதி குழந்தையாக கருதி, அதன் பெற்றோரை தேடும் பொருட்டு ஒவ்வொரு நாடாக கொண்டு செல்கிறார்கள். Little Amal, செல்லும் இடமெல்லாம் அனைத்து குழந்தைகளும், ஆர்வத்துடன் வரவேற்கிறார்கள். மேலும், நடனம் ஆடி, அதனுடன் கைகுலுக்கி மகிழ்கிறார்கள்.

தற்போது, ஜெனிவா நாட்டிற்கு Little Amal வந்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்றுவிட்டு, ஜெனிவா ஏரி கரை வழியே, அதன் நடை பயணம் தொடர்ந்துள்ளது. பிரிட்டனின் Good Chance என்ற தொண்டு நிறுவனம் தான் இந்த நடை பயணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறது.

Categories

Tech |