Categories
உலக செய்திகள்

உயிரை காப்பாற்றிய மருத்துவமனை…. நன்றிக்கடனாக சிறுவன் செய்தது… குவியும் பாராட்டுக்கள்

தனது உயிரை காப்பாற்றிய மருத்துவமனைக்காக சிறுவன் ரூபாய் 2.75 கோடி நிதி திரட்டியது  பலரது பாராட்டையும் பெற்றுக் கொடுத்துள்ளது

லண்டனை சேர்ந்த டோனி என்ற சிறுவன் குழந்தையாக இருந்த சமயம் அவரது பெற்றோரால் காயமடைந்து தனது இரண்டு கால்களையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். தற்போது வளர்ப்பு பெற்றோருடன் வசித்து வரும் அவர் கொரோனா களத்தில் அயராது பணிபுரிந்து வரும் மருத்துவர்களுக்கு உதவ இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற கேப்டன் ஒருவர் தனது தோட்டத்தில் நடந்து நிதி திரட்டிய சம்பவம் குறித்து அறிந்தார்.

இதனையடுத்து தானும் அதேபோன்று தனது உயிரை காப்பாற்றிய மருத்துவமனைக்கு நிதி திரட்ட முடிவு செய்தார். இரண்டு கால்களை இழந்து தற்போது செயற்கை கால்களுடன் நடமாடி வரும் டோனி ஊன்றுகோல் உதவியுடன் நடக்கத் தொடங்கி பத்து கிலோமீட்டர் நடந்து இந்திய ரூபாய் மதிப்பில் 42,800 ரூபாய் திரட்டுவதற்கு முடிவு செய்தார். ஆனால் அவர் ஆச்சரியப்படும் விதமாக அவரது அறக்கட்டளைக்கு 2.75 கோடி ரூபாய் இதுவரை நன்கொடையாக வந்தடைந்துள்ளது அதோடு சிறுவனுக்கு பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளது.

Categories

Tech |