Categories
அரசியல்

கேட்பதை கொடுக்கும் முதல்வர்…. பட்டியலிட்ட அமைச்சர்…. கலக்கிய கவர்ண்மெண்ட் …!!

தமிழக முதல்வர் கேட்பதை செய்து கொடுக்கின்றார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பட்டியலிட்டுள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், முதலமைச்சர் இன்றைய காலகட்டத்தில் மருத்துவத்துறைக்கு கேட்கின்ற எல்லா மனித வளங்களையும் கொடுத்துள்ளார். மருத்துவர், ஸ்பெஷாலிட்டி டாக்டர், செவிலியர்கள், லேப் டெக்னிஷியன், பரா மெடிக்கல் ஸ்டாப், ஸ்டாப் நர்ஸ் என பலரையும் நியமனம் செய்துள்ளோம். கொரோனாவில் தாக்கம் தொடங்கியதற்கு பின்னால் மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த செவிலியர்கள், லேப் டெக்னீசியன் உட்பட மொத்தமாக மருத்துவர்கள், பணியாளர்கள் சேர்த்து 12 ஆயிரத்து 480 பேர் பணி நியமனம் செய்துள்ளோம்.

AIADMK crisis escalates as T.T.V. Dhinakaran fires salvo

இன்னும் செவிலியர்கள் கூடுதலாக கேட்டதனால் நேற்று 2,000 பேர் தற்காலிகமாக, ஆறு மாதத்திற்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு அவர்களும் உடனடியாக பணியில் சேர்ந்து வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒரு பேரிடர் காலத்தில் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் கொடுத்து ஒரு நாள், ரெண்டு நாள்  காலம் தாமதிக்காமல் பணியில் சேருவதற்கு ஆர்வமா இருக்காங்க.சார் கொரோனா டியூட்டி   என்ன  போடுங்க, நான் ஒரு நாள் டியூட்டி பாக்குறேன்.எனக்கு இந்த வாரமே போடுங்க அப்படின்னு அவுங்க கேட்கக் கூடிய அளவுக்கு தான் இருக்காங்க.

 

உலகமே அச்சத்தோடு, பயத்தோடு இருக்கக் கூடிய சூழ்நிலையில் எங்களுடைய செவிலியர்கள் வந்து எனக்கு டியூட்டி கொடுங்க அப்படின்னு ஆர்வமா கேட்டுப் பெறக் கூடிய நிலையில் இருப்பது பாராட்டுக்குரியது. தன்னலம் கருதாமல், சேவை ஒன்றை மனதில் வைத்துக் கொண்டு முழு கவச உடை போட்டுகொண்டு உள்ள போனாலும் தனக்கு ஆபத்து என்று தெரிஞ்ம் ஆர்வமாக டியூட்டி கேட்குற நிலை தமிழகத்தில் இருக்கு, நான் செவிலியர்களை பாராட்டுகின்றேன்.

கொரோனா நோயாளிகளுக்கு தினமும் டெய்லி கவுன்சிலிங் கொடுக்கிறோம்.  மனநல மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு ஆலோசனைகளை வழங்குகி வருகின்றார்கள். வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்கள், கணவனுக்கு கொரோனா வந்துவிட்டால் மனைவி பதற்றத்தோடு இருக்கிறாங்க.. மனைவிக்கு போன் பண்ணி மருத்துவர்கள் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய கவுன்சிலிங் கொடுக்குறாரு. எல்லா இடங்களிலும் இந்த டெல்லி கவுன்சிலிங்கை விரிவுபடுத்தி கொண்டிருக்கின்றோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Categories

Tech |