மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுமென்றும் , மக்களவை தேர்தலுடன் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தேர்தல் அறிவிப்பையடுத்து தமிழகத்தில் உள்ள கட்சிகள் கூட்டணி குறித்த வியூகங்களை வகுக்க ஆரம்பித்தனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் 40 தொகுதியிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். இதையடுத்து தமிழகத்தில் திமுக , அதிமுக , அமமுக , நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் என்று ஐந்து முனை போட்டியாக பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தங்கள் கட்சியின் வேட்பாளரை அறிவித்தனர்.மேலும் தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டனர்.இதையடுத்து இந்திய குடியரசு கட்சி, மக்கள் நீதி மய்யத்தோடு கூட்டணி அமைத்து நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை சந்திக்க உள்ளதாக ஆதரவு தெரிவித்தது.இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இந்திய குடியரசு கட்சிக்கு ஒரு நாடாளுமன்றம் மற்றும் 3 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் முதல் கட்டமாக 21 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்தார். அதன் விவரம் வருமாறு :
வட சென்னை – ஏ.ஜி.மவுரியா
மத்திய சென்னை – நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர்
திருவள்ளூர் – எம்.லோகரங்கன்
அரக்கோணம் – என்.ராஜேந்திரன்
வேலூர் – ஆர்.சுரேஷ்
கிருஷ்ணகிரி – எஸ்.ஸ்ரீகாருண்யா
தருமபுரி – வழக்கறிஞர் வி.ராஜசேகர்
விழுப்புரம் – வழக்கறிஞர் அன்பில் பொய்யாமொழி
சேலம் – ரகுமணிகண்டன்
நீலகிரி – வழக்கறிஞர் ராஜேந்திரன்
திண்டுக்கல் – டாக்டர் எஸ்.சுதாகர்
நாகப்பட்டினம் – குருவைய்யா
தூத்துக்குடி – பொன் குமரன்
புதுச்சேரி – எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன்
மேலும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வருகின்ற மார்ச் மாதம் 24ஆம் தேதி கோவையில் அறிவிக்கப்படுமென்றும் கமல் தெரிவித்தார்.