Categories
அரசியல் மாநில செய்திகள்

10 தலை இராவணன் மாதிரி…! DMK செம ஸ்ட்ராங்கா இருக்கு… பதறும் டிடிவி தினகரன் …!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எடப்பாடி தலைமையில் நாங்கள் இணைய மாட்டோம் என  பலமுறை சொல்லி இருக்கோம். அதே நேரத்திலே நான் திரும்பவும் சொல்றேன், அம்மாவுடைய உண்மையான தொண்டர்கள், எங்கே இருந்தாலும் எல்லோரும் ஒரு அணியில் சேர்ந்தால்தான் திமுகவை வீழ்த்த…

நம்மோடு  கூட்டணிக்கு வருகின்ற கட்சியோடு சேர்ந்து, தேசியக் கட்சியோடு சேர்ந்து தேர்தலை சந்தித்தால் தான் திமுக என்கிற தீய சக்தியை நாம் வீழ்த்த முடியும் என்ற எதார்த்தத்தை நான் சொல்றேன். இதை நீங்க விக்னஸ் என பார்த்தீங்கன்னா…  அதுக்கு மேல என்னால பதில் சொல்ல முடியாது.

எதார்த்தம் என்னவென்றால் திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால்,  அது பெரிய கூட்டணி வைத்துக்கொண்டு…  பத்து கட்சிகளுடன் கூட்டணி வைத்து ராவணன் மாதிரி திமுக இருக்காங்க. இன்னைக்கு அவங்க ஆளுங்கட்சியாக இருக்காங்க. அவங்களுக்கு தமிழ்நாட்டுல வீழ்த்த வேண்டும் என்றால் நல்ல கூட்டணி வைத்து செயல்பட வேண்டும். எல்லாக் கட்சியும் கூட்டணி வைத்து தான் தேர்தலில் போட்டியிடுறாங்க என தெரிவித்தார்.

Categories

Tech |