Categories
தேசிய செய்திகள்

மம்தா பேனர்ஜியை போல் வேறு யாரும் நடந்து கொள்வதில்லை… சுவேந்து அதிகாரி குற்றச்சாட்டு…!!

புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொள்ளாததை தொடர்ந்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

யாஸ் புயல் காரணமாக மேற்கு வங்கம், ஒரிசா போன்ற மாநிலங்களில் பெரும் சேதம் ஏற்பட்டதை அடுத்து நேற்று பிரதமர் மோடி பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். மேற்குவங்கம் வந்து சேர்ந்த பிரதமர் மோடியை மரபுப்படி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமான நிலையம் சென்று வரவேற்கவில்லை. மேலும் பிரதமர் மோடி நடத்திய ஆலோசனைக் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை. இந்த சம்பவம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து நந்திகிராமம் தொகுதியில் மம்தாவை தோற்கடித்த சுவேந்து அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் “மேற்கு வங்கத்தின் முன்னேற்றத்திற்காக பிரதமருடன் இணைந்து பணியாற்றுவதற்கு பதிலாக மம்தா பானர்ஜி தனியாக அரசியல் நடத்துகிறார். பிரதமரின் கூட்டத்தை மம்தா பானர்ஜி தவிர்த்தது அருவருப்பானது. பல மாநிலங்களில் அவர் புயல் பாதிப்புகளை பார்வையிட்ட போது அனைத்து மாநில முதல்வர்களும் அவருடன் இணைந்து செயல்பட்டனர். ஆனால் முதல்வர் மம்தா பானர்ஜி போல் யாரும் நடந்து கொள்ளவில்லை என்று தெரிவித்தார். அரசியல் செய்ய ஒரு காலமும், ஆட்சி செய்ய ஒரு காலமும் இருக்கின்றது அதை மம்தா பானர்ஜி புரிந்துகொள்ளவேண்டும்” என்று அவர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |