Categories
தேசிய செய்திகள்

மும்பையில் காவலர்களை போல நடித்து 12 கோடி கொள்ளையடித்த சம்பவம்…. 8 பேர் அதிரடி கைது…!!

மும்பையில் உணவகம் ஒன்றில் காவலர்களை போல நடித்து 12 கோடியை கொள்ளையடித்து சென்ற 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புறநகர் பகுதியான விலே பார்லேவில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் காவலர்கள் போல நுழைந்த நபர்கள் அங்கு சோதனை நடத்த வேண்டும் என்று கூறி 12 கோடியை எடுத்து சென்றனர். பின்னர் உணவக ஊழியர்கள் காவல் நிலையத்திற்கு வந்த போது நாங்கள் சோதனை செய்யவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதை அடுத்து உணவகத்தில் கொள்ளையடிக்க சம்பவம் தெரியவந்தது. இதுகுறித்து உணவகத்தில் சிசிடிவி காட்சிகளை கொண்ட அந்த கும்பலை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |