விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எம்பி தொல். திருமாவளவன் பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் நினைவு நாளில் அவருடைய திருவுருவப்பட வைத்திருக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தியதோடு அது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார். இதனால் எம்பி பதவியில் இருந்து தொல் திருமாவளவனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக தற்போது வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம் விடுதலைப் புலிகள் இயக்கம்.
இந்த இயக்கம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ய திட்டமிட்டதோடு, படுகொலைகளை திட்டமிட்டு நடத்தியவர் அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் என நீதிமன்றமே கூறியுள்ளது. இப்படிப்பட்ட ஒரு இயக்கத்திற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்பி பதவியில் இருக்கும் ஒருவர் வீர வணக்கம் செலுத்துவதும், படுகொலையை அரங்கேற்றிய நபரின் புகைப்படத்தை மரியாதையாக பதிவிடுவதும் கண்டிக்கத்தக்கது. இவர் நாட்டின் இறையாண்மைக்கு சவால் விட்டதோடு தேச துரோக குற்றத்திலும் ஈடுபட்டுள்ளார்.
இப்படிப்பட்ட ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து சபாநாயகர் ஓம் பிர்லா பதவி நீக்கம் செய்ய வேண்டும். இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பு மற்றும் ப முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த அமைப்பை கொண்டாடும் தொல். திருமாவளவனை கைது செய்வதற்கு தமிழக காவல்துறை முன் வர வேண்டும். அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டியது காவல்துறையின் கடமை. கொஞ்சமாவது வெட்கம், மானம், சூடு சொரணை, ஏதாவது இருந்தால் காங்கிரஸ் கட்சி இந்த கூட்டணியில் நீடிக்குமா? தமிழக அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்குமா என்று பதிவிட்டுள்ளார்.