‘லிப்ட்’ படத்தின் ஆடியோ உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக நடிகர் கவின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார் .
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் கவின் . இதைத்தொடர்ந்து நட்புனா என்ன தெரியுமா, சத்ரியன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் . தற்போது கவின் இயக்குனர் வினித் வரப்ரஸாத் இயக்கத்தில் ‘லிப்ட்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் பிகில் பட நடிகை அமிர்தா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார் .
Happy to announce our association with @thinkmusicindia :)🎵✨#Lift ⬇️⬆️ @Actor_Amritha @willbrits @VineethVarapra1 @Hepzi90753725 @dancersatz @DopYuva @ganesh_madan @nyshanth_r @proyuvraaj @Yuvrajganesan @knackstudios_ @rk3dguy @369vfx pic.twitter.com/tX3bvrOU2G
— Kavin (@Kavin_m_0431) March 3, 2021
எக்கா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார் . ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது . இந்நிலையில் லிப்ட் படத்தின் ஆடியோ உரிமையை பிரபல திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக நடிகர் கவின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.