சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு – ஒரு ஸ்பூன்
பெருங்காயம் – அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
கத்தரி, சௌசௌ, முள்ளங்கி, கீரைத்தண்டு, கேரட் – தேவையான அளவு
செய்முறை:
ஒரு வாணலியில் துவரம் பருப்பு, பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து கொள்ளவும். அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய், உளுத்தம்பருப்பு போட்டு வெடிக்க விடுங்கள்.
அதனுடன் கருவேப்பிலை, பச்சை மிளகாய், தக்காளி, பொடியாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
பின்னர் புளியைக் கரைத்து ஊற்றி, சாம்பார் பொடியும், உப்பும் சேர்த்து காய்களை நறுக்கி போட்டு மூடிவிடவும். காய்கள் வெந்ததும் பருப்பை மசித்து ஊற்றவும்.
இறுதியில் நன்றாக கொதித்ததும் மல்லித் தழை போட்டு இறக்கவும். வெண்டைக்காய் இருந்தால் எண்ணெயில் வதக்கி பருப்பு போடும்போது போட வேண்டும். இப்போது சாம்பார் ரெசிபி தயார்.