பச்சை பட்டாணியின் மருத்துவ பயன்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
இயற்கையாகவே தமிழர்களின் உணவு முறையில் மருத்துவ குணம் அடங்கியுள்ளது. நாம் சாப்பிடும் ஒவ்வொரு காய்கறிகளிலும் ஏதேனும் ஒரு மருத்துவ நன்மை ஒளிந்திருக்கிறது. அந்த வகையில், உடலுக்கு தேவையான மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம், தாமிரம் உள்ளிட்ட சத்துக்களை கொண்ட பச்சை பட்டாணியை தினமும் உணவில் எடுத்துக் கொள்வதால், பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவி மலச்சிக்கலை போக்குகிறது. மேலும் ரத்த அழுத்தத்தை குறைத்து, இதய நோய்க்கு முக்கிய காரணமான கெட்ட கொழுப்புகளின் வளர்ச்சியையும் இந்த பச்சை பட்டாணி தடுக்கிறது.