எள்ளில், பி1, பி6, நியாசின், தையாமின், போலிக் அமிலம், ரிபோ பிளேவின் போன்ற வைட்டமின்களும், புரோட்டீன் மற்றும் இரும்பு சத்துக்களும் நிரம்பி உள்ளது. அப்படி இருக்கும் எள்ளை வைத்து ஒரு வித்தியாசமான ரெசிபியை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
எள் பர்ஃபி செய்ய தேவையான பொருட்கள்:
வெள்ளை எள் – 2 கப்
நெய் – 5 ஸ்பூன்
வெல்லம் – 1 ½ கப்
தண்ணீர் – சிறிதளவு
பிஸ்தா, பாதாம் – சிறிதளவு (நறுக்கியது)
செய்முறை:
முதலில் அடுப்பில் வாணலியை வைத்து, ஒரு கப் வெள்ளை எள்ளை சேர்த்து, மிதமான தீயில் மூன்று நிமிடங்கள் வறுத்து, ஆறியபின் மிக்சியில் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.
மற்றொரு வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி, அதில் பொடி செய்து வைத்துள்ள அரை கப் வெல்லம், சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பின் பாகு வந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள எள்ளை சேர்த்து, நன்கு திரண்டு வரும் வரை கை விடாமல் கிளறவும்.
பின்பு, நெய் தடவிய தட்டில் திரண்ட எள்ளை கொட்டி, அதன் மேல் நறுக்கி வைத்துள்ள பாதாம் மற்றும் பிஸ்தாவை வைத்து அலங்காரம் செய்யவும்.
அதனை தொடர்ந்து, வெது வெதுப்பாக இருக்கும் போதே, நெய் தடவிய கத்தியை கொண்டு தேவையான அளவில் பர்பியாக அறுக்கவும். ஆறியபின், பர்பியை துண்டுகலாகுவது, மிகவும் கடினம். இப்போது, சுவையான மற்றும் சத்தான எள் பர்ஃபி தயார்.