Categories
Uncategorized சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்… காலிஃப்ளவர் சூப்…!!!

காலிஃப்ளவர் சூப் செய்ய தேவையான பொருட்கள்:

துருவிய காலிஃப்ளவர்               – 1 கப்
காலிஃப்ளவர் தண்டு                  – 1/2 கப்
கோதுமை மாவு                             – 1 டேபிள்ஸ்பூன்
வெங்காயம்                                    – 1
பால்                                                     – 1 கப்
மிளகுத்தூள்                                    – சிறிதளவு
பூண்டு                                               – 4 பல்
நெய் அல்லது வெண்ணெய்  – தேவையான அளவு
உப்பு                                                   – தேவைக்கேற்ப

செய்முறை:

முதலில் 1/2 கப் காலிஃப்ளவர் தண்டு, 4 பூண்டு, 1 வெங்காயத்தை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் தேவையான அளவு நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, அதில் 1 கப் துருவிய காலிஃப்ளவரை சேர்த்து வதக்கி, பின் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் புரட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின் மற்றொரு கடாயில் நெய் அல்லது வெண்ணெய் விட்டு, அரைத்து வைத்திருக்கும் விழுதை அதில் சேர்த்து, தொடர்ந்து 1 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவை போட்டுக் கிளறி, பின் 2 நிமிடங்கள் கழித்து ஒரு கப் நீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.

இறுதியில் வதக்கி வைத்துள்ள காலிஃப்ளவர் கலவையும் அதனுடன் சேர்த்துக் கொதித்ததும், உடனே 1 கப் பால் சேர்த்துக் கிளறி இறக்கவும். இப்போது சத்தான காலிஃப்ளவர் சூப் ரெடி.

Categories

Tech |