ஸ்பெஷல் மட்டன் மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
மட்டன் – 1/2 கிலோ
தக்காளி – 100 கிராம்
இஞ்சிப்பூண்டு – சிறிதளவு
உப்பு – சிறிதளவு
மஞ்சள்தூள் – சிறிதளவு
பெரிய வெங்காயம் – சிறிதளவு
செய்முறை:
மட்டனை சுத்தம் செய்து துண்டுகளாக்கி கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டை அரைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் நெய்விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை நறுக்கிப் போட்டு தாளிக்கவும். வெங்காயம் பொன்னிறத்தில் வரும்பொழுது இஞ்சி, பூண்டு ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
அதனுடன் 1/2 கிலோ மட்டன், நறுக்கிய தக்காளி, மஞ்சள்த்தூள், உப்பு சேர்த்து மூடி வைத்து வேகவிடவும். மட்டன் வெந்து வரும்போது கொத்தமல்லி இலை தூவி இறக்கிவிடவும். இப்போது மட்டன் மசாலா தயார்.