ஸ்பைசி கார்ன் சாட் செய்ய தேவையான பொருட்கள் :
கார்ன் – 1 கப்
தக்காளி – 1
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
கொத்தமல்லி தழை – சிறிதளவு
பிளாக் சால்ட் – அரை ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
சாட் மசாலா – அரை ஸ்பூன்
மிளகு தூள் – 1 ஸ்பூன்
தக்காளி – 1
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
கொத்தமல்லி தழை – சிறிதளவு
பிளாக் சால்ட் – அரை ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
சாட் மசாலா – அரை ஸ்பூன்
மிளகு தூள் – 1 ஸ்பூன்
செய்முறை:
முதலில் தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்னர் அடுப்பில் பாத்திரத்தை வைத்து சோளத்தை போட்டு, தண்ணீர் ஊற்றி, நன்கு வேக வைத்து, தண்ணீரை வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
மேலும் ஒரு பவுலில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், பிளாக் சால்ட், எலுமிச்சை சாறு, மிளகை போட்டு நன்கு கலக்கி கொள்ளவும்.
பின்பு கலந்து வைத்த கலவையில், வேக வைத்த சோளத்தை போட்டு நன்கு கலந்து, இறுதியில் கொத்தமல்லி தழை, சாட் மசாலாவை தூவியபின் எடுத்து பரிமாறினால், ருசியான ஸ்பைசி கார்ன் சாட் ரெடி.