உளுந்து கார புட்டை செய்து சாப்பிட கொடுப்பதால், இது குழந்தைகள் முதல் பெரியர்வர்கள் வரை அனைவர்க்கும் மிக நல்லது. மேலும் இதில் உளுந்து சேர்க்கப்படுவதால், இதில் உள்ள சத்துக்கள் இடுப்பு எலும்பு வலுபெறவும், மூட்டு வலிகளை சரி செய்யவும், முதுகு வலியிலிருந்து எளிதில் குணமடையவும், உடம்பு வலுப்பெறவும், நோயினால் பாதிக்கபட்டு மீண்டவர்களுக்கு ஒரு வர பிரசாதமாகவும் இது உதவுகிறது. எனவே உளுந்தினால் செய்யப்படும் உணவுகளை அடிக்கடி சாப்பிட எடுத்து கொள்வதால் உடம்பிற்கு மிகவும் நல்லது.
உளுந்து கார புட்டு செய்ய தேவையான பொருட்கள்:
உளுந்து – 1 கப்
தேங்காய் துருவல் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
தாளிக்க:
கடுகு, உளுந்தம்பருப்பு – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
எண்ணெய் – 1 ஸ்பூன்
செய்முறை:
முதலில் உளுந்தை ஒரு பாத்திரத்தில் எடுத்து, மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, 1 மணிநேரம் நன்கு ஊறவைத்து கொள்ளவும். பின்பு மிக்சிஜாரில் ஊற வைத்த உளுந்தை போட்டு, ருசிக்கேற்ப உப்பு தூவி, லேசாக தண்ணீர் தெளித்து, பரபரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
இட்லி பாத்திரத்தை அடுப்பில் அதில் தண்ணீர் ஊற்றி சூடானதும், இட்லி பாத்திரத்தில் உள்ள தட்டில், அரைத்த உளுந்து கலவையை, இட்லிகளாக ஊற்றி நன்கு வேக வைத்து இறக்கி ஆற வைத்து, மற்றோரு பாத்திரத்தில் உதிரியாக உதிர்த்து எடுத்து கொள்ளவும்.
பிறகு கொத்தமல்லிதழையை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின்னர் அகலமான கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலையை போட்டு தாளித்ததும் உதிரியாக உதிர்த்து வைத்த உளுந்தை சேர்த்து கரண்டியால் நன்கு கிளறி விடவும்.
கடைசியில் கிளறிவிட்ட உளுந்து கலவையானது நன்கு வெந்ததும், அதனுடன் தேங்காய் துருவல், கொத்தமல்லி தழையை போட்டு நன்கு கெட்டியாகி பூ போல் உதிரியாக வரும் வரை கிளறிவிட்டபின் இறக்கி வைத்து பரிமாறினால், ருசியான உளுந்து கார புட்டு தயார்.