சீரக முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 250 கிராம்,
உளுத்தம் மாவு – 2 டீஸ்பூன்,
சீரகம் – 2 டீஸ்பூன்,
எண்ணெய் – 250 மில்லி,
வெண்ணெய் – 2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
முதல்ல ஒரு பாத்திரத்துல அரிசி மாவு, வறுத்து அரைத்த உளுத்தம் மாவு, சீரகம், வெண்ணெய், பெருங்காயத்தூள் சேர்த்து, ருசிக்கேற்ப உப்பு தூவி, லேசாக தண்ணீர் தெளித்து, நல்லா முறுக்கு மாவு பதத்தில் பிசைஞ்சதும், அதை சில நிமிடம் கழித்து முறுக்கு அச்சில் சிறிது சிறிதாக வச்சி, சின்ன முறுக்குகளாக பிழிந்து எடுத்துக்கணும்.
பிறகு அடுப்புல கடாயைவச்சி, பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, நல்லா கொதிக்க ஆரம்பிச்சதும் அதில் பிழிஞ்சி வச்ச முறுக்கு மாவு கலவையை, ஒவ்வொன்றாக எடுத்து கொதிக்கின்ற எண்ணெயில் போட்டு வேக வைத்து, நல்லா சிவந்து வந்ததும், திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறினால் ருசியான சீரக முறுக்கு ரெடி.