ரஸ்க் முந்திரி ஃப்ரை செய்ய தேவையான பொருட்கள்:
பொடித்த ரஸ்க் – ஒரு கப்
முந்திரிப் பருப்பு – 30
கடலை மாவு – ஒரு கப்
அரிசி மாவு – 4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – 250 மில்லி
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதல்ல ஒரு பாத்திரத்துல அரிசி மாவு, பொடித்த ரஸ்க், கடலை மாவு, மிளகாய்த்தூள் சேர்த்து, ருசிக்கேற்ப உப்பு தூவி, லேசாக தண்ணீர் ஊற்றி ஓரளவுக்கு கெட்டியாக கரைத்துஎடுத்துக்கணும்.
பிறகு அடுப்புல வாணலியை வச்சி, பொறிக்கிற அளவுக்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி,கொதிக்க ஆரம்பித்ததும், சிறிது சிறிதாக முந்திரிகளை எடுத்து,கரைச்சி வச்ச மாவுக் கலவையில் நனைத்ததும், அதை கொதிக்கின்ற எண்ணெய்யில் போட்டு நல்லா வெந்து சிவக்க பொரித்து எடுத்து பரிமாறினால் ருசியான ரஸ்க் முந்திரி ஃப்ரை ரெடி.