Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

Ravaவை வைத்து… அருமையான ருசியில்… சூடான fish fry செய்து கொடுத்து அசத்துங்க..!!

 ரவா மீன் ப்ரை செய்ய தேவையான பொருட்கள்:

வஞ்சர மீன்                  – 8 துண்டுகள்
எலுமிச்சை சாறு       – 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை           – 5 இலைகள்
வரமிளகாய்                 – 5
மல்லி                             – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய்         – 4
கசகசா                            – 1 டீஸ்பூன்
ஓமம்                               – 1 சிட்டிகை
பூண்டு                             – 5 பற்கள்
இஞ்சி                              – 1/2 துண்டுகள்
சீரகம்                              – 1 டீஸ்பூன்
ரவை                               – 1 கப்
எண்ணெய்                   – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு                                 – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பாத்திரத்தில் வஞ்சர மீனை எடுத்து துண்டுகளாக நறுக்கியதும், நன்கு சுத்தமாக கழுவியபின், அதில் உப்பு,  எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக விரவி  சில நிமிடம், அப்படியே  ஃப்ரிஸரில்  வைக்கவும்.

பின்னர் மிக்சிஜாரில்  வரமிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கசகசா, சீரகம், மல்லி போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

பின்பு குளிர வைத்த மீனை எடுத்து, அதில் அரைத்த  மசாலா கலவையை  நன்கு விரவியபின், மீண்டும் அதை  சில நிமிடம் ஃப்ரிஸரில் அப்படியே ஊற வைக்கவும்.

பிறகு அடுப்பில்  வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஓமம்,  கறிவேப்பிலை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை, சில மணி நிமிடம் நன்கு வதக்கி கொள்ளவும்.

பின் விரவிய மீன் துண்டுகளை எடுத்து, ரவையில் போட்டு  பிரட்டி எடுத்து , வதக்கிய எண்ணெயில் போட்டு, இரண்டு பக்கமும் நன்கு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறினால், அருமையான ருசியில் ரவா மீன் ப்ரை தயார்.

Categories

Tech |