உலர் பழ அல்வா செய்ய தேவையான பொருள்கள்:
தேங்காய்த் துருவல் – ½ கப்
கேரட் – 250 கிராம்
பேரீச்சம் பழம் – 150 கிராம்
சர்க்கரை – 300 கிராம்
பால் – 500 மில்லி லிட்டர்
பாதாம் – 100 கிராம்
திராட்சை – 10
நெய் – 300 கிராம்
ஏலக்காய்த்தூள் – 2 டீஸ்பூன்
வேர்க்கடலை – 50 கிராம்
முந்திரி பருப்பு – 100 கிராம்
செய்முறை:
முதலில் பாதாம் பருப்பு , முந்திரி பருப்பு, வேர்க்கடலைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி சில மணி நேரம் நன்கு ஊற வைத்தபின், மிக்சிஜாரில் போட்டு நன்கு மையாக அரைத்து எடுத்து கொள்ளவும். பின்பு தேங்காயை எடுத்து நன்கு உதிரியாக துருவி எடுத்து கொள்ளவும்.
பின்னர் பேரிச்சம் பழத்தை அதன் விதைகளை நீக்கிவிட்டபின், சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். அதன் பின்பு ஒரு பெரிய முடியில் கேரட்டை எடுத்து, உதிரியாக துருவி எடுத்து கொள்ளவும்.
பிறகு அடுப்பில் அகலமான வாணலியை வைத்து, அதில் சிறிதளவு நெய் ஊற்றியபின், துருவி வைத்த தேங்காய், அரைத்து வைத்த பாதாம் கலவையை போட்டு நன்கு கிளறி விடவும்.
மேலும் அதனுடன், நறுக்கி வைத்த பேரீச்சம்பழத் துண்டுகள், திராட்சை, பால் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு கரண்டியால் நன்கு கொதிக்க விட்டபின், அதில் ருசிக்கேற்ப தேவையான அளவு சர்க்கரை, ஏலக்காய்த் தூள், நெய் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
அடுத்து கிளறி விட்ட கலவையானது நன்கு இறுகும் அளவுக்கு கெட்டியான பதம் வந்தபின் கடைசியாக இறக்க போகுவதற்கு முன்பு, துருவி வைத்த கேரட்டை அதன் மேல் உதிரியாக தூவியபின் பரிமாறினால், ருசியான உலர் பழ அல்வா ரெடி.