Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சாக்லேட் மோதகம்… குழந்தைங்களுக்கு பிடித்தமான ரெசிபி…!!!

சாக்லேட் மோதகம் செய்ய தேவையான பொருட்கள்:

டார்க் சாக்லேட்                   – ¾ கப்,
ஃப்ரெஷ் க்ரீம்                        – ½ கப்,
கன்டென்ஸ்டு மில்க்         – ½ கப்,
பிஸ்கெட் துண்டுகள்         – 2 கப்,
பாதாம்                                       – சிறிதளவு
பிஸ்தா                                      – சிறிதளவு
முந்திரி                                      – சிறிதளவு
வால்நட்                                    – சிறிதளவு
நெய்                                             – சிறிதளவு

செய்முறை: 

முதலில் பாதம், பிஸ்தா, முந்திரி, வால்நட்ஸ் இவற்றை சிறிய துண்டுகளாக கொள்ளவும். அடுப்பில் நான்  ஸ்டிக் வாணலியை  வைத்து அதில் ஃப்ரெஷ் க்ரீம், கன்டென்ஸ்டு மில்க் மற்றும் டார்க் சாக்லேட்டை ஒன்றாகப் போட்டு நன்கு கலக்கி கொள்ளவும்.

பின்பு,அடுப்பை மிதமான தீயில் எறிய வைத்து, அதை கைவிடாமல் கிளறியவுடன், கெட்டியான பேஸ்ட் போன்ற பதத்திற்கு வந்தவுடன், சில நிமிடங்களுக்குப் பிறகு நறுக்கப்பட்ட பிஸ்கட் மற்றும் முந்திரி, பாதாம் போன்றவற்றையும் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் கிளறவும்.

இந்தக் கலவை மேலும், கெட்டியான  மாவுப்பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை நிறுத்திவிட்டு வேறொரு தட்டில் இந்தக் கலவையை மாற்றி நன்கு  ஆற வைக்க வேண்டும்.மேலும், ஆறிய பின்பு  மோதக அச்சில் நெய் தடவி கொள்ளவும்.

பின்பு  செய்து வைத்த கலவையை மோதக அச்சில் அடைத்து அந்த உருவத்தில் உள்ள மாவை எடுத்து பரிமாறினால் அழகான, சுவையான சாக்லேட் மோதகங்கள் தயார்.  இதை காற்றுப் புகாத டப்பாக்களில் வைத்து ஒருவாரம் வரையிலும் பயன்படுத்தலாம்.

 

Categories

Tech |