கேரட் குருமா செய்ய தேவையான பொருட்கள்:
கேரட் – கால் கிலோ
வெங்காயம் – 1
தக்காளி – 1
தேங்காய் – அரை கப்
பூண்டு – 4 பற்கள்
கசகசா – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
தனியா தூள் – அரை ஸ்பூன்
பச்சைபட்டாணி – ஒரு கையளவு
பச்சை மிளகாய் – 4
எண்ணெய் – 1 குழிக்கரண்டி
கருவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லி – ஒரு பிடி
பட்டை, கிராம்பு – 4
ஏலக்காய் – 2
சோம்பு – ஒரு ஸ்பூன்
உப்பு – 2 ஸ்பூன்
இஞ்சி – அரை துண்டு
செய்முறை:
முதலில் கேரட், தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, தக்காளி, கொத்தமல்லி தழையை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்பு மிக்ஸிஜாரில் நறுக்கி வச்ச தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி துண்டுகள், பூண்டு கசகசாவை சேர்த்து நல்லா மையாக அரைத்து எடுத்துக்கிடனும்.
அடுப்புல கடாயை வச்சி லேசாக எண்ணெய் ஊற்றி சூடேறியதும், சோம்பு பட்டை,கிராம்பு,ஏலக்காய்யை போட்டு நல்லா வாசனை வரும் வரை வறுத்தபின், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நல்லா சிவக்க வதக்கியதும், தனியா தூள், கறிவேப்பிலை, நறுக்கி வச்ச தக்காளியை போட்டு நல்லா வதக்கி குழைய வேக விடவும்.
பிறகு தக்காளி நல்லா வெந்ததும், நறுக்கி வச்ச கேரட்துண்டுகளை போட்டு, கிளறிவிட்டு வதங்கும் வரை நல்லா வேக விடவும். பின்னர் வேக வச்ச கேரட்டில், அரைச்சி எடுத்த தேங்காய் கலவையை போட்டதும், ருசிக்கேற்ப உப்பு, மஞ்சள் தூளை தூவி விட்டபின் தேவைக்கேற்பதண்ணீர் ஊற்றியதும், கேரட் நல்லா வேகும் வரை கொதிக்க வைக்கவும்.
மேலும் கேரட் நல்லா வெந்ததும், அதில் பச்சைப் பட்டாணியை போட்டு நல்லா கிளறி விட்டபின் மறுபடியும் நன்றாக கொதி வச்சி கெட்டியானதும், நறுக்கி வச்ச கொத்தமல்லி தழையை தூவி இறக்கி வச்சி பரிமாறினால், ருசியான கேரட் குருமா ரெடி.