Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனிப்பு மற்றும் காரம் நிறைந்த… காரசாரமான ருசியில்… சூப் செய்யலாம்..!!

கேரட்                                             – 100 கிராம்
இஞ்சி                                             – சிறிய துண்டு
பூண்டு                                            – 5 பல்
வெண்ணெய்                              – 2 ஸ்பூன்
மிளகு தூள்                                  – சிறிதளவு
உப்பு                                                – சிறிதளவு
கொத்தமல்லிதழை                – சிறிதளவு
புதினா இலை                             – சிறிதளவு

செய்முறை:

கொத்தமல்லி, புதினாவை எடுத்து  பொடியாக நறுக்கி கொள்ளவும்.  பின்பு  கேரட், இஞ்சி, பூண்டை எடுத்து நன்கு துருவி எடுத்து  கொள்ளவும்.

மேலும் அடுப்பில் குக்கரை வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அதில் துருவிய கேரட், இஞ்சி, பூண்டைபோட்டு, முடி வைத்து, 2 விசில் வந்ததும்,  இறக்கியபின் ஆற வைத்து, அதை மிக்சிஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்..

அதன் பின்பு கடாயை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் ஊற்றி  சூடானதும், அதில் துருவிய பூண்டை போட்டு தாளித்த பின், அரைத்து வைத்துள்ள கேரட் கலவையை ஊற்றி, தேவையான அளவு உப்பு தூவி நன்கு கொதிக்க விடவும்.

பின்னர்  சூப் நன்கு  கொதித்ததும், மிளகு தூள்,  பொடியாக நறுக்கிய  கொத்தமல்லி, புதினாவை போட்டு இறக்கி பறிமாறினால் ருசியான  கேரட் இஞ்சி சூப் தயார்.

Categories

Tech |