Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ப்ரெட் சாப்பிட பிடிக்க வில்லையா… அப்ப இந்த ரெஸிபிய செஞ்சிபாருங்க..!!

ப்ரெட் புட்டு செய்ய தேவையான பொருட்கள்:

ப்ரெட்         – 3 ஸ்லைஸ்
தேங்காய் – கால் கப்
சர்க்கரை  – தேவையான அளவு
தண்ணீர்    – 2 தேக்கரண்டி

செய்முறை:

மிக்சி ஜாரில் ப்ரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கி விட்டு, அதில் சேர்த்து ஒரு சுற்று சுற்றி நன்கு உதிர்த்துக் கொள்ளவும். பின்பு தேங்காயை எடுத்து  மிக்சி ஜாரில் போட்டு பூவாக உதிர்த்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில் உதிர்த்த ப்ரெட் துண்டுகளை  போட்டு அதில் சர்க்கரையை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து புட்டு மாவு பதத்திற்கு நன்கு  கலந்து கொள்ளவும்.

புட்டு குழலை எடுத்து அதில்  தேங்காய் துருவல், பின்னர் ப்ரெட் தூள் என்று முழுவதும் நிரப்பவும். அடுப்பில் 5 நிமிடங்கள் நன்கு ஆவியில் வேக வைத்து எடுத்து பரிமாறினால் சுவையான ப்ரெட் புட்டு தயார். அதை சூடாக எடுத்து  வாழைப் பழத்துடன் பரிமாறவும்.

Categories

Tech |