Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

சோம்பலை துரத்தி… சுறுசுறுப்புடன் வாழ… டிப்ஸ் இதோ…!!!

நாம் அனைவரும் சோம்பலை துரத்தி, நாள் முழுவதும் எனர்ஜெட்டிக்காக  இருக்க விரும்புகிறோம். அதைச் செய்வதற்கான சுலபமான வழிகளில் ஒன்று, ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகளை உட்கொள்வது. எனவே அக்ரூட் பருப்புகள், ஆளி விதைகள், அத்திப்பழங்கள் மற்றும் பிற பொருட்கள் போன்ற உலர்ந்த பழங்களின் ஆகியவை பெருமளவு ஊட்டச்சத்தினை தர உதவுகிறது.

அக்ரூட் பருப்புகள் தூக்கத்தைத் தூண்டுவதோடு  மற்றுமல்லாமல் தோல், கூந்தல், இதய நோய், நீரிழிவு நோய் ஆகியவற்றை கட்டுப்படுத்த உதவுகிறது. அக்ரூட் பருப்புகள் மூலம் மார்பக புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. அக்ரூட், கர்ப்பிணிப் பெண்களுக்கு அற்புதமான சூப்பர் ஃபுட் என்று சொல்லப்படுகிறது.

தேவையான பொருட்கள்: 

அக்ரூட் பருப்புகள்            – 1 கப்
உலர்ந்த அத்தி                    – 1 கப்
ஆளி விதைகள்                  – ⅓ கப்
தேன்                                        – ⅓ கப்
வறுத்த வேர்க்கடலை     – ½ கப்
இலவங்கப்பட்டை தூள் – 1 தேக்கரண்டி

செய்முறை: 

ஒரு பாத்திரத்தில், அக்ரூட் பருப்புகள், அத்தி, ஆளி விதைகள், தேன், வறுத்த வேர்க்கடலை மற்றும் இலவங்கப்பட்டை தூள் ஆகியவற்றை சேர்க்கவும்.

மைக்ரோவேவ் ஓவனில் 190 டிகிரி செல்சியஸ் வரை சூடாக்கி, அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் கலவையை ஒரு பேக்கிங் தட்டிற்கு மாற்றியபின், 12-15 நிமிடங்கள் நன்கு மிருதுவாகும் வரை வைத்து எடுக்கவும்.

பின் கலவையை குளிர வைத்து, காற்று உள்ளே செல்லாத ஒரு ஜாடிக்கு மாற்றவும். சுவையான மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டி தயார்.

Categories

Tech |