Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகம் மென்மையாக இருக்கணுமா? அப்போ இத ட்ரை பண்ணுங்க…!!!

ஃபேஸ் மாஸ்க் செய்ய தேவையான பொருட்கள்:

வாழைப்பழம்                 – ஒன்று
தயிர்                                    – ஒரு ஸ்பூன்
பால் பவுடர்                      – ஒரு ஸ்பூன்
தேன்                                    – ஒரு ஸ்பூன்
எலுமிச்சை சாறு           – ஒரு ஸ்பூன்

செய்முறை: 

ஒரு வாழைப்பழத்தை எடுத்து, அவற்றில் உள்ள தோல் பகுதியை நீக்கி விட்டு, அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு பவுலை எடுத்து, அதில் தயிர் ஒரு ஸ்பூன், பால் பவுடர் ஒரு ஸ்பூன், தேன் ஒரு ஸ்பூன் மற்றும் எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் என அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இப்போது ஃபேஸ் மாஸ்க் தயார்.

பயன்படுத்தும் முறை:

முதலில் முகத்தை சுத்தமாக கழுவிக் கொள்ளுங்கள். பின் தயார் செய்து வைத்துள்ள மாஸ்கை முகத்தில் அப்ளை செய்யவேண்டும். பின் 15 நிமிடங்கள் வரை காத்திருந்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இதேபோல் வாரத்தில் 2/3 முறை செய்து வர சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி சருமம் மென்மையாக காணப்படும். மேலும் தொடர்ந்து இதை பாலோ செய்து வருவதினால், முகம் வெள்ளையாக காணப்படும்.

Categories

Tech |