வெள்ளை மாளிகையில் வசிப்பது தங்க கூட்டில் இருப்பது போல உணர்வதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று கடந்த 20ம் தேதி 46 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றார். அதன் பிறகு அவர் தனது மனைவிக்கு ஜில் பைடனுடன் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் குடியேறினார். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இதுவே அவர்களின் இல்லம்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டியளித்த ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வசிப்பது தங்க கூட்டில் இருப்பது போல இருக்கிறது என்று தன் அனுபவத்தை பற்றி பேசி உள்ளார். வெள்ளி மாளிகை குறித்து ஜோ பைடன் கூறியதாவது, நான் காலையில் எழுந்ததும் முதலில் என் மனைவியிடம் தற்போது நாம் எங்கு இருக்கிறோம் என்று நகைச்சுவையாக கேட்பேன்.
இன்னும் வெள்ளை மாளிகையில் இருக்கும் பணியாளர்களுடன் தான் பழகவில்லை. ஆகையால் பெரும்பாலான வேலைகளை நானே கவனித்துக் கொள்வேன். நான் துணை ஜனாதிபதியாக இருந்த போது 100 முறைக்கு மேல் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்துக்கு வந்துள்ளேன். ஆனால் ஒருமுறைகூட ஜனாதிபதியின் குடியிருப்பு பகுதிக்கு வந்தது இல்லை.
இப்போதுதான் நான்கு வாரங்களாக இங்கு கூடி இருப்பது எனக்கு புதிதாக இருக்கிறது. மேலும் 80 ஏக்கரில் அமைக்கப்பட்ட துணை ஜனாதிபதி இல்லத்திற்கும், ஜனாதிபதி இல்லத்திற்கும் முற்றிலும் வேறுபாடு உள்ளது. தனது இந்த வெள்ளை மாளிகையின் அனுபவம் குறித்து முன்னாள் ஜனாதிபதிகள் சிலருடன் தொலைபேசியில் பேசியுள்ளேன் என்று கூறினார்.