எல்ஐசியில் ஒரு அருமையான பாலிசி குறித்து பார்க்கலாம்.
இந்தியாவில் முதலீடு மற்றும் சேமிப்புக்கு பெரும்பான்மையான மக்களின் நம்பகத்தன்மையாக எல்ஐசி நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனத்தில் குறைந்த அளவில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும். இந்த நிறுவனத்தில் அடித்தட்டு முதல் நடுத்தர மக்கள் வரை பெரும்பாலானோர் முதலீடு செய்கின்றனர். இந்நிலையில் குறைந்த முதலீட்டில் அதிக அளவில் லாபம் பெற விரும்புவர்கள் ஜீவன் லாப் பாலிசியை தேர்வு செய்யலாம். இந்த திட்டத்தில் 8 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்கள் வரை சேர்ந்து கொள்ளலாம். இந்த பாலிசியின் மொத்த காலம் 16 வருடங்கள் ஆகும்.
இந்த திட்டத்திற்கான குறைந்தபட்ச முதலீடு தொகை ரூபாய் 2 லட்சம் ஆகும். இந்த திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு உடல் நலக் கோளாறு, விபத்து மற்றும் மரணம் போன்றவைகள் ஏற்பட்டால் சலுகைகள் கிடைக்கும். இந்த சலுகைகளை வாடிக்கையாளர்கள் விரும்பி கொண்டால் மட்டுமே பெற்றுக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் படி மாதம் குறைந்தது 5000 ரூபாய் முதல் வாடிக்கையாளர்கள் முதலீட்டு தொகையாக செலுத்தலாம். இந்த திட்டத்தில் ஒரு வருடத்திற்கு 86,954 ரூபாய் கட்டினால் பாலிசியின் முடிவில் ரூபாய் 54.50 லட்சம் கிடைக்கும். அதாவது ஒரு நாளைக்கு 238 ரூபாய் செலுத்தினால் மட்டுமே போதுமானது.