Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…. வாக்குவாதத்தை தவிர்க்கவும்…. நல்ல செய்தி கிடைக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே…! இன்று தீவிர தெய்வ பக்தியால் மனநிம்மதி கூடும். புத்திர பாக்கியம் ஏற்படும். திருவருளாலும் குருவருளாலும் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். வெளியிடங்களுக்குச் சென்று பொழுதைக் கழிக்கலாம் என்ற சிந்தனையும் வரும். கணவர் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பதும் ரொம்ப நல்லது. பிள்ளைகளிடமும் அன்பாக நடந்து கொள்ளுங்கள். அவர்களின் வெற்றிக்கு இன்று அனைத்து விஷயங்களிலும் உதவிகரமாக இருப்பீர்கள்.

எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணங்கள் செல்வதாக இருந்தால் கொஞ்சம் கவனமாக இருங்கள். ஆனால் பயணங்கள் ஓரளவு சாதகமான பலனையே கொடுக்கும். தூரதேசத்திலிருந்து நல்ல தகவல்கள் உங்களுக்கு வந்து சேரும். வேலைக்காகக் காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்திகளும் வந்து சேரும். காதலர்களுக்கு இன்று சிறப்பான நாளாக அமையும் காதலர்கள் இருந்தாலும்  வாக்குவாதத்தில் மட்டும் எப்பொழுதும் ஈடுபட வேண்டாம்.

இ ன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப சிறப்பு. நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |