Categories
சினிமா தமிழ் சினிமா

சித்ராவை இப்படி சொல்லலாமா..? ரசிகர்கள் அதிர்ச்சி..!!

சித்ராவின் தற்கொலை குறித்து ஹேம்நாதின் தந்தை பல்வேறு தகவல்களை கூறி வருகிறார்.

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில் அவரது கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சித்ராவின் பெற்றோர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் சித்ரா உடன் நெருக்கமாக இருக்கும் படத்தை வைத்து மிரட்டியதாகவும், அரசியல்வாதி ஒருவர் தொடர்ந்து பேசி வந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. சித்ராவை மிரட்டிய நபர் யார் என்பதை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றனர். இது விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து ஹேம்நாதின் தந்தை சித்ராவிற்கு ஏற்கனவே 3 ஆண்களுடன் தொடர்பு உள்ளது என்றும், சித்ரா மது பழக்கம் உள்ளவர் என்றும் தெரிவித்தது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |