Categories
சினிமா தமிழ் சினிமா

எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வருவோம்…. பிரபல நடிகர் நம்பிக்கை…!!!

எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வருவோம் என்று பிரபல நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான கன்னிமாடம் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீ ராம் கார்த்திக். இவர் தற்போது பெற்றோர்கள் குழந்தைகளுக்காக வாழும் கதையம்சம் கொண்ட மங்கி டாங்கி என்ற திரைப்படத்திலும், ஆக்ஷன் படமாக உருவாகி வரும் யுத்த காண்டம் திரைப்படத்திலும், லிவ்விங் டு கெதர் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீராம் கார்த்திக் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, நான் நடிக்கும் ஒவ்வொரு படமுமே தனித்தன்மை கொண்டதாக இருக்கிறது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் நான் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |