Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நாங்க ஊருக்கு போறோம்….. கோவில் உண்டியலுடன் தலைமறைவு…… 4 இளைஞர்களுக்கு போலீஸ் வலைவீச்சு….!!

திருவாரூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட சென்ற 4 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை அடுத்த நெடுவாக்கோட்டை யில் மாய காத்தான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கருணாகரன் என்பவர் பூசாரியாக பணியாற்றி வருகிறார். இவர் இன்று காலை கோவிலை திறக்க வந்தபோது கோவிலில் இருந்த பீடமும், சிறிய மணிமண்டபமும் எடுக்கப்பட்டு அதில் இருந்த உண்டியல் திருடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின் இது குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சுற்றி முற்றி சோதனையில் ஈடுபட்டனர். பின் அதே கிராமத்தை சேர்ந்த 4 பேர் திடீரென வெளியூருக்கு சென்றதை அடுத்து  சந்தேகித்த அவர்கள், 4 பேரும் தான் திருடிச் சென்று இருக்க வேண்டும் என்று உறுதி செய்து அதே பகுதியைச் சேர்ந்த பிரபு ,பார்த்திபன் ,அறிவழகன் ,வீரமணி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |