அவசர பயணத்துக்கு உதவ கட்டுப்பாடு அறை உருவாக்கப்பட்டுள்ளது என்று சென்னை காவல்த்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் சமூக விலகலை கடைபிடிக்க மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 42 பேர் உறுதி செய்யப்பட்ட நிலையில் 2 பேர் குணமடைந்துள்ளனர், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தில் முற்றிலும் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டதால் அவசர பயணத்துக்கு உதவ கட்டுப்பாடு அறையை போலீசால் உறுதி செய்துள்ளனர். சென்னையில் இருந்து அவசர தேவைகளுக்காக பயணம் மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. திருமணம், மருத்துவம், இறப்பு உள்ளிட்டவற்றிற்காக செல்ல அவசர கால கட்டுப்பாட்டு அறைக்கு விண்ணப்பிக்கலாம்.
7530001100இல் தொடர்பு கொண்டோ/ எஸ்.எம்.எஸ்/ வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவிக்கலாம். [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். அவசர பயணத்துக்கான அனுமதி சீட்டு பெற கோரிக்கை கடிதத்துடன் அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.