Categories
உலக செய்திகள்

போரை சந்திப்போம்…. இனி அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை இல்லை…. ஈரான் அதிபர் அதிரடி பேச்சு…!!

இனி எந்த நிலையிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை கிடையாது என ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவின் எண்ணெய் நிலையத்தின் மீது ஈரான் தான்  தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. மேலும் இந்த தாக்குதலுக்கு எதிர்வினையாற்ற அமெரிக்க ராணுவம் தயாராக இருப்பதாகவும்  தெரிவித்துள்ளது. இந்நிலையில் தங்கள் மீது அமெரிக்கா சுமத்தும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என ஈரான் தலைவர் கூறியுள்ளார். இது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்தால் போரை சந்திக்க வேண்டிய தேவை ஏற்படும் என்று ஈரான்  தலைவர் அறிக்கை விடுத்துள்ளார்.

Image result for america vs iran

இதையடுத்து எந்த நிலையிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை கிடையாது என ஈரான் உயர்மட்டக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொலைக்காட்சியில் பேசிய அவர் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எந்த திட்டமும் ஈரானிடமில்லை என்றார். சவுதி அரேபிய எண்ணெய் ஆலய தாக்குதல் சம்பவத்தை பயன்படுத்தி ஈரானுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்க திட்டமிடுவதாக கூறிய அவர் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்தப் பயனும் இல்லை என்றும் இனி அவர்களிடம் எந்த நிலையிலும் பேச்சுவார்த்தை இல்லை என்றும் அயத்துல்லா அலி காமெனி  தெரிவித்துள்ளார்.

Categories

Tech |