அஜித்தின் துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை அடுத்து விஜய் – அஜித் ரசிகர்கள் போஸ்டர் யுத்தத்தில் இறங்கி உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அல்டிமேட் ஸ்டார், தல என ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகின. இதனை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் போஸ்டர் அடித்து வெளியிட்டு வருகின்றனர். மதுரையில் அஜித் ரசிகர்கள் அடித்த போஸ்டரில் வாரிசா வந்து ஜெயிக்கிறது ஒன்னும் பெரிய விஷயம் அல்ல. தனியா துணிவா வந்து ஜெயிக்கிறது தான் பெரிய விஷயம் என்று விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தை சீண்டி ரசிகர்களை வம்புக்கு இழுத்துள்ளனர்.
அதேபோல அஜித் ரசிகர்களின் மற்றொரு போஸ்டரில் எங்களுக்கு எதிரியாய் இருக்கணும்னு நினைக்காத, ஏன்னா எங்களுக்கு துணிவு ஜாஸ்தி மீறி, நினைச்சா உன் வாரிசு-யே அழிச்சிடுவோம் அப்படி என விஜய் படத்தை ஒப்பிட்டு போஸ்டர் அடித்துள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் விஜய்யின் தளபதி ரசிகர்கள் துணிவா இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, ஃபர்ஸ்ட் தளபதி என்ட்ரி தான் என்று பதிலடி கொடுத்துள்ளனர்.