Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

பெண் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை பாடம்

13 வயது எட்ட இருக்கும் பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் கட்டாயம் ஒரு சில பாடங்களை கற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது.

உடல் மாற்றங்களை மட்டுமன்றி சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் பக்குவத்தையும் குழந்தைகளுக்கு அதுவும் பெண் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டியது அவசியமான ஒன்று ஆகின்றது.

அப்படி எந்த விஷயத்தைப் பற்றி பெற்றோர் பெண் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும் என்பது பற்றிய தொகுப்பு.

ஆண் பெண் சமம்

பெண் குழந்தைகள் தைரியமாக வளர முதலில் கற்றுக் கொடுக்க வேண்டிய விஷயம் ஆண்களுக்கு குறைந்தவர்கள் இல்லை பெண்கள். ஆண் பெண் இருவருமே சமம்.  உரிமைகள் வாய்ப்புகள் அனைத்தும் பெண்களுக்கும் உண்டு என்பதை அவர்களுக்கு கற்றுத் தரவேண்டும்.

பேச்சுரிமை

நமது தேவைகளை நிவர்த்தி செய்ய, நமது உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் பேசுவதுதான் ஒரே தீர்வு. தைரியம் என்பது நம் பேச்சில் தான் உள்ளது என்பதை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். வீட்டில் இருந்தே அதனை துவங்கவேண்டும். என்ன பிடிக்கும் என்ன விரும்புகிறாய் என்பதை அவர்களை பேச வைத்து தெரிந்து கொள்ள வேண்டும்.

முடியாது என்றால் முடியாது

சமூகத்தில் யாரேனும் ஏதும் நினைத்து விடுவார்களோ என்று யார் என்ன கேட்டாலும் முடியாது என்ற பதிலை சொல்லாமல் சரி சரி என்று சொ வதும் தவறான முடிவாகும். முடியாது என்று கூறுவதால் யாரும் ஒன்றும்  சொல்லிவிட போவதில்லை என்பதையும் எடுத்துரைத்து முடியாது என்று சொல்ல உரிமையுண்டு என்பதையும் புரிய வைக்க வேண்டும்.

பருவமடைதல் சாதாரணம்

13 வயதில் உடல் மாற்றங்கள் இருக்கும் இந்த வயதில் தான் பருவமடைதல் நடக்கும். இவை  தடையல்ல உடலை வலிமைப்படுத்தும் உறுதிப்படுத்தவுமே  இது நடைபெறுவதாக உணர்த்துங்கள். இதனால் அச்சம் கொள்ள தேவையில்லை என்பதையும் உணரச் செய்யுங்கள்.

தயக்கம் வேண்டாம்

இந்தப் பருவத்தில் பெண் குழந்தைகளுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழும். அதேநேரம் சந்தேகங்களை கேட்கலாமா கேட்க கூடாதா என்ற யோசனையும் தான். தயக்கம், பயம் கொண்டு பெற்றோர்களிடமிருந்து விலகி விடுவார்கள். அதனை தவிர்க்க எதுவாயினும் கேட்டு தெரிந்துக் கொள் தயக்கம் வேண்டாம் என அவர்களுக்கு அறிவுறுத்தி அவர்களது சந்தேகங்களை தீர்க்க வேண்டும்.

Categories

Tech |