Categories
அரசியல் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தமிழக தேர்தல் வரட்டும்…. பாஜகவை வச்சு செய்யுறோம்…. விவசாயிகள் ஆவேசம் ….!!

விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் முகத்திரையை தோலுரிப்போம் என்று கூறியுள்ளார்.

தமிழக காவிரி விவசாயிகள் பொதுக்குழு செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில்,புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும்,நெல் குவிண்டாலுக்கு 2,500 ரூபாய் வழங்க வற்புறுத்தியும் விவசாய சங்கத்தினர் நேற்று நாகை மாவட்டம் வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் இருந்து தஞ்சை ராஜராஜன் சிலை வரை பேரணி நடத்தினர்.

பேரணியில் பேசிய பி.ஆர்.பாண்டியன், புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் பிரதமரை வலியுறுத்த வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் வரும் தேர்தலில் தமிழக மக்கள் அதிமுகவை புறக்கணிப்பார்கள். தமிழக அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக விவசாயிகள் இருக்கின்றனர்.

எனவே தமிழ்நாட்டு விவசாயிகளை அழிக்க நினைக்கும் சட்டத்திற்கும் மோடிக்கும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் முகத்திரையை தோலுரித்து காட்டுவோம். அதற்கு துணை போகும் இயக்கங்களுக்கு எதிராக தேர்தலில் களம் இறங்குவோம் என்று தெரிவித்தார்.

Categories

Tech |