Categories
மாநில செய்திகள்

மக்கள் கஷடப்படுறாங்க…! உடனே ரூ.40,000 கொடுங்க…! வைகோ பரபரப்பு அறிக்கை ..!!

மதிமுக செயலாளர் வைகோ விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40,000 நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்து வரும் கன மழையால் வெள்ள சேதம் ஏற்பட்டு இப்பதால்  விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி முளைகட்ட தொடங்கிவிட்டது.

இதனால் ஏக்கர் கணக்கில் விளைவித்த நெல், கரும்பு,வாழை, மணிலா, மக்காச்சோளம், சூரியகாந்தி, உளுந்து, பாசி போன்ற விளைவித்த அனைத்து பயிர்களும் நீரால் நாசமாகி இருப்பதை கண்டு வேளாண் குடிமக்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர்.எனவே அரசாங்க அதிகாரிகள் சேதமடைந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு நிவாரணம் வழங்கும் பணியினை  மேற்கொள்ளாதது மிகவும் கண்டனத்துக்குரியது.

தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 40,000 ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். மேலும் விவசாயிகளின் விவசாய கடன்களை தமிழக அரசு உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |