Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

எல்லாரும் கலைந்து போங்க… தொடர்ந்து எழுந்த கோஷங்கள்… அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு…!!

திருவாரூர் மாவட்டத்தில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் அதிமுக நிர்வாகியினர் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ஷாஜகான் தலைமை தாங்கிய நிலையில் கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றுள்ளனர்.

இதனையடுத்து மேலப்பூவனூர் கிராமத்தில் நீடாமங்கலம் கிழக்கு ஒன்றியம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஆதிஜனகர் தலைமை தங்கியுள்ளார். மேலும் தகவலறிந்து வந்த நீடாமங்கலம் காவல்துறையினர் ஆர்பாட்டடத்தை கைவிடுமாறு அதிமுக நிர்வாகிகளிடம் கூறியுள்ளனர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியதால் காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |