Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “முயற்சி வெற்றியை கொடுக்கும்”.. உங்களுக்கு நல்ல காலம் தான்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு புதிய வாகனங்கள் வாங்கலாமா என்று சிந்தனை செய்வீர்கள். தொழில் தொடர்பாக எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். இன்று எந்த ஒரு பிரச்சினையையும் நீங்கள் சமாதானமாக பேசி முடிவுகளை எடுப்பீர்கள். சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு மத்தியில் ஓரளவு நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள்.

பிள்ளைகளால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும். இறை அருளும் தெவீக நம்பிக்கையும் கூடும். உங்கள் திறமையில் இருந்துவந்த பின்தங்கிய நிலை மாறும். இனி உங்களுக்கு நல்ல காலம் தான். அனைத்து விஷயங்களுமே சிறப்பாக நடக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். கொடுக்கல் வாங்கலும் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். சக மாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது  ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அளவில் இருக்கும். அது மட்டும்மில்லை இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |