எதையும் ஆராய்ந்து பார்த்து தீர்க்கமான முடிவை எடுக்கக்கூடிய சிம்மராசி அன்பர்களே..!! இன்று தொலைதூர நல்ல தகவல்களால் புதிய உற்சாகம் பிறக்கும். மனையாளின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சியை கொடுக்கும். நண்பர்கள் உதவி கிடைக்கும். புதிய உத்தியோக வாய்ப்புகள் ஏற்படும். இன்று தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். உடல்நிலையில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
நண்பர்களின் ஆலோசனைகள் உங்களை நல்வழிப்படுத்தும். இன்று முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் நாளாகவும் இருக்கும். இன்று மாணவர்கள் கல்வி நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். அது போலவே படித்த பாடத்தை எழுதிப் பாருங்கள். அப்போதுதான் நினைவில் வைத்துக் கொள்ள உதவும். இன்று நீங்கள் முக்கியமான பணியை செய்யும் பொழுது அல்லது முக்கியமான காரியங்களை செய்யும்போது சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே இன்று விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்