மன அழுத்தம் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியது தான் என்றாலும், ஒரு விதத்தில் நமக்கு உதவுகிறது. அது என்னவென்பதை இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
முன்பெல்லாம் நமது வீடு இருக்கும் தெருவில் உள்ள அனைத்து மக்களிடமும் நட்பு வட்டாரத்தை பெருக்கி நெருக்கமாக பழகி வந்திருப்போம். ஆனால் தற்போது வீட்டிற்குள் இருக்கும் நபர்களிடமே நாம் அனைத்தையும் கூறி பகிர்வது இல்லை. இதன் காரணமாகவே தற்போது பெரும்பான்மையானோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மன அழுத்தத்தால் உடல் அளவில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவது ஒருபுறமிருக்க, இவ்வாறான மன அழுத்தம் வரும் போது மட்டுமே நாம் நம் நமது நட்பு வட்டாரங்களை தேடுகிறோம். நமக்கு நெருக்கமானவர்களிடம் மொபைல் மூலமாகவோ அல்லது நேரில் சென்று பேச முன் வருகிறோம். அவர்களிடம் அத்தனை பிரச்சனையும் கூறுவதன் மூலம் மன அழுத்தம் நீங்குகிறது. மன அழுத்தம் ஒருபுறம் உடலுக்கு தீங்கு விளைவித்தாலும் உறவுகளை வளர்ப்பதில் மன அழுத்தம் நல்லதை செய்கிறது.