லெஜெண்ட் சரவணன் தமிழகத்தில் பிரபலமான தொழிலதிபராவார். இவர் தமிழ் சினிமாவில் ‘தி லெஜன்ட்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் வசூலில் ஓரளவு நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து, ட்விட்டர் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.
இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என் மீது அன்பை வைத்திருக்கும் என் மக்களுக்காக என் வீடு என்றென்றும் திறந்திருக்கும் எனவும், என் வீட்டில் 24 மணி நேரமும் அன்னதானம் நடைபெறுகிறது எனவும் பதிவிட்டுள்ளார்.
என்மீது அன்பை வைத்திருக்கும் என் மக்களுக்காக என் வீடு என்றென்றும் திறந்து இருக்கும்…#TheLegend #LegendSaravanan pic.twitter.com/0PCVeOzhN2
— Legend Saravanan (@yoursthelegend) October 5, 2022